சுமித் நாகலுக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது: ரோஜர் பெடரர் புகழாரம்

இந்திய இளம் டென்னிஸ் வீரர் சுமித் நாகலுக்குச் சிறப்பான எதிர்காலம் இருப்பதாக உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் புகழாரம் சூட்டியுள்ளார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை, 22 வயதான இந்திய வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரரை, தனது முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சந்தித்த சுமித் நாகல், முதல் செட்டைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பின்னர் சுதாரித்துக்கொண்ட பெடரர் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் சுமித் நாகல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கூறியுள்ள பெடரர், களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்துள்ளதாகவும், இதனால் அவருக்குச் சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்முறையாகப் பெரிய களத்தில் விளையாடும் போது சிறப்பாக விளையாடுவது எளிதான ஒன்றல்ல எனக் கூறிய பெடரர், சுமித் நாகல் களிமண் மைதானத்தில் மேலும் சிறந்து விளங்குவார் என்றும் கூறினார்.

Exit mobile version