காவிரி -கோதாவரி நதி நீர் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் , ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து ஜல்லிப்பட்டியில் பேசிய முதலமைச்சர், ஏழை எளியோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக துவங்கப்பட்ட கட்சி அதிமுக என்றார். தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த தலைவர் எம்.ஜி.ஆர் என்றும் அவர் குறிப்பிட்டார். கிராமம் முதல் நகரம் வரை அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.