வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறியிருக்கும் செய்யது சுஜா, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என இ.சி.ஐ.எல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை இ.சி.ஐ.எல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனிடையே 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தின் வாக்குபதிவு இயந்திரத்தை தயாரிக்கும் குழுவில் பணிபுரிந்ததாக கூறிய செய்யது சுஜா, 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது வாக்குபதிவு இயந்திரத்தில் சிலர் முறைகேடு செய்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் செய்யது சுஜா தங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று இ.சி.ஐ.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக செய்யது சுஜாவுக்கு எதிராக டெல்லி காவல்துறையிடம் தேர்தல் ஆணையம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.