ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கோடை வெயிலின் தாக்கத்தால் கரும்பு சாறு மற்றும் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
வெயிலின் தாக்கத்தால் தாகத்தை போக்கிக்கொள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பு சாறு அதிகம் விரும்பி அருந்திச் செல்கின்றனர். பனை நுங்கு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் இஞ்சி, சுக்கு, எலுமிச்சம் பழம் ஆகியவை கலந்து கரும்புச்சாறு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.