பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், குறைந்த விலைக்கு கரும்பு விற்பனையாவதாக விவசாயிகள் கூறுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவையாறு, அம்மாப்பேட்டை, பாபநாசம், பூதலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
வழக்கமாக 8 முதல் 10 அடி உயரம் வரை கரும்புகள் வளரும். இந்தாண்டு 6 அடி உயரும் வரை மட்டுமே கரும்புகள் வளர்ந்துள்ளன. கஜா புயல் பாதிப்புகள் இதற்கு காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.