"21 குழந்தைகளை பெற்றெடுத்த 43 வயது பிரிட்டன் பெண்"

20 குழந்தைகளை பெற்று பிரிட்டன் நாட்டின் பெரிய குடும்பம் என்று பெயர் எடுத்த சூ குடும்பத்திற்கு தற்போது, 21 வது குழந்தை பிறந்துள்ளது.

43 வயது நிரம்பிய பெண் சூ ராட்ஃபர்ட் (Sue Radford) இவர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். சேனல் 4 மூலமாக பிரிட்டனில் அதிக குழந்தை பெற்றவர் என்று வெளியுலகத்திற்கு அறியப்பட்டவர்.

நவம்பர் 6 ஆம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அதற்கு போனி என்று பெயர் சூட்டியுள்ளனர். “சூ” வின் கணவர் பெயர் நோயல். இருவரும் அடுத்த, அடுத்த குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தனர்.ஆகையால் இத்தனை குழந்தைகளை பெற்று எடுத்தார் என்று தெரிவித்துள்ளனர் “சூ” தம்பதியினர்.

சூ ராட்ஃபர்ட் தமது 14ஆவது வயதில் முதல் குழந்தையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக குழந்தைகளுடன் “சூ” மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version