திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்: நீரில் மூழ்கிய அரிச்சல் முனை

தனுஷ்கோடியில் பாக் ஜலசந்தி கடற்கரை பகுதியில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால், அரிச்சல் முனை மூழ்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் பாக் ஜலசந்தி கடற்கரையில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, கடல் அரிப்பு ஏற்பட்டு அரிச்சல் முனை நீரில் மூழ்கியது. தற்போது அரிச்சல்முனை பகுதி மூழ்க துவங்கி உள்ளதுடன் சாலையோர தடுப்புச் சுவரும் கடல் நீரில் அரிப்பு ஏற்பட்டு உடைந்து வருகிறது. இதனால் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் செல்வதற்கு இன்றிலிருந்து தடை விதிக்கப்பட்டது. தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் கம்பிபாடு பகுதியுடன் நிறுத்தப்படுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் புனித நீராட வரும் பக்தர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version