வெங்காயத்தின் விலை திடீரென உயர்வு

வட மாநிலங்களில் பெய்த தொடர் மழை எதிரொலியாக, கிடுகிடிவென உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலை, அடுத்த சில நாட்களில் சதம் அடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதால், வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் கடந்த வாரம், கிலோ 38 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம், தற்பொது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் வெங்காயத்தின் விலை கிலோ, 100 ரூபாயை தாண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, விலை உயர்வை கட்டுப்படுத்த வியாபாரிகள், வெங்காயத்தை கையிருப்பு வைப்பதற்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version