போலந்து நாட்டில் தன்பால் ஈர்ப்பாளர்கள் பேரணியில் திடீரென ஏற்பட்ட கலவரம்

போலந்து நாட்டில் நடைபெற்ற தன்பால் ஈர்ப்பாளர்கள் பேரணியில், 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போலந்து நாட்டில் நடைபெற்ற தன்பால் ஈர்ப்பாளர்கள் பேரணியில், 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது LGBT சமூகத்திற்கு எதிராக திரண்ட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பேரணியை சீர்குலைக்க முயன்றனர். பட்டாசுகள் வெடித்தும், பாட்டில்களை வீசியும் பேரணியை தடுத்த அவர்கள் LGBT சமூகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விரைந்து வந்த காவல்துறையினர் வன்முறையை கட்டுப்படுத்தினர். அமைதியாக நடைபெற்ற பேரணி திடீரென கலவர பூமியாக மாறியது. போலந்து காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

Exit mobile version