தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக அதிகாலையில் சுமார் 2 மணி நேரம் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மத்திய அரசின் நிறுவனங்களையும், அரசின் காலி இடங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. இதனால் காலையில் பணிக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம், 6.30 மணி வரை தொடர்ந்ததால், சுமார் 2 மணி நேரம் பேருந்துகள் இன்றி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையே செல்லும் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் காத்திருக்கும் சூழல் உருவானது. 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.