சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 21 வீடுகள் மண்ணில் புதைந்ததில், 11 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள லையூபன் சூய் நகரம் அருகே உள்ள கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேரை காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.