மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென பற்றிய காட்டுத் தீயில் அரியவகை மூலிகை எரிந்து நாசமாகின.
கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மளமளவென பரவிய தீயால், அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகி சாம்பலாகின. காட்டுத் தீயால்யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை பொய்ததன் காரணமாக இந்தப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர், தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடும் சிலர், தீ வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.