ஆத்தூரில் கயிறு தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் நார்கள் தீப்பிடித்து எரிய துவங்கியது. தீ ஆலை முழுவதும் வேகமாக பரவியதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தேங்காய் நார்கள் எரிந்து சேதமாகின.

Exit mobile version