களியக்காவிளையில் மலையாள திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தமிழக – கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் உள்ள ரிச்சுதமீன்ஸ் திரையரங்கத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மலையாள சினிமா காட்சிகள் ஓடிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீப்பிடித்தது. இதனைப் பார்த்த சினிமா ரசிகர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து, கேரள மாநிலம் பாறசாலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது என்றும், தீ விபத்தில் புராஜக்டர், ஏசி உட்பட 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.