மெக்ஸிகோவில் உள்ள போபோகேட்பெட்டல் எரிமலை திடீரென வெடித்ததில் சுமார் ஆயிரம் மீட்டர் உயரம் வரை எரிகுழும்புகள் வெளியேறியது.
மெக்ஸிகோ நாட்டின் 2வது மிகப்பெரிய எரிமலையான போபோகேட்பெட்டல் எரிமலை வெடித்ததில் வானை முட்டும் அளவிற்கு கரும்புகைகளும், பாறை துகள்களும் வெளியேறியது. மேலும், எரிமலையின் மேற்பரப்பில் பனிபடர்ந்த்து போல் சாம்பல்கள் படர்ந்து காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அவசர சேவை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீண்ட நேரம் கரும்புகை இருந்ததால், அப்பகுதியில் சூரிய உதயம் கூட தெளிவாக காண முடியாத நிலை ஏற்பட்டது.