ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 144 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 24 கேரட் தங்கம் கிராமுக்கு 151 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 214 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 208 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 144 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 13 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து152 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் 9 காசுகள் குறைந்து 46 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 ஆயிரத்து 900 ரூபாய் குறைந்து 46 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version