சூடான் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

சூடான் நாட்டில் இயங்கி வரும் செராமிக்ஸ் கம்பெனி ஒன்றில், கடந்த 3ம் தேதி வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேரின்  குடும்பத்தினருக்கு  ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு 
இதனையறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்திய தூதரகம் மற்றும் பிரதமரை தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு, அவர்களுக்கான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, உயிரிழந்த மூவரின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மூவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version