புவியின் மேற்பரப்பை தெளிவாக படம்பிடிக்க உதவும் ரிசாட் 2பி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி – சி48 ராக்கெட் மூலம் அதிகாலை 5.30 மணிக்கு ரிசார்ட் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளானது 15 நிமிடங்கள் 30 நொடிகளில் தற்காலிக சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. படிப்படியாக செயற்கைகோளின் உயரம் அதிகரிக்கப்பட்டு அதிகபட்ச தூரத்தில் செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. 615 கிலோ எடை கொண்ட ரிசார்ட் 2பி செயற்கைகோளின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புவியின் மேற்பரப்பை தெளிவாக படம் பிடிப்பதற்காக உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிநவீன காமிராக்கள் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன. வேளாண்மை, வனச்சூழல், பாதுகாப்பு தொடர்பான படங்களை ரேடாரின் உதவியுடன் தெளிவாக படம் பிடிக்க இந்த காமிராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.