சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முழுமையாக ரத்து!

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்ததால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனையடுத்து, செப்டம்பர் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் 594 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மானியம் மற்றும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் பெரிய வித்தியாசம் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, இதன் மூலம் அரசிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version