மானிய சிலிண்டர் ரூ.113, மானியமல்லாத சிலிண்டர் ரூ.6.52 விலை குறைப்பு

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய நிறுவனங்கள், வீடு, வணிகப் பயன்பாடு என இரண்டு விதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, இவற்றின் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மானியம் அல்லாத சிலிண்டர் விலை 113 ரூபாயும், மானிய விலை சிலிண்டர் 6 ரூபாய் 52 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

 

Exit mobile version