தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பதற்றமாக உள்ளதாக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்த நாட்களிலேயே குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அர்ச்சகர்கள் அதிகம் குறிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புக்கவனம் எடுத்து, இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பி, அறிக்கை தயாரித்து வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.