திருத்தணியில் சுப்ரமணிய சாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பரணி காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா, பரணி விழாவாக இன்று தொடங்கியது. மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை 4 மணி அளவில் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் புஷ்ப காவடி ஏந்தியும், அலகு குத்திக் கொண்டும் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.
தமிழ்நாடு மட்டும் அல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். நாளை நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.