திருவாரூர் சாதிய வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை சம்பவம் தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருவண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை எதிர் தரப்பினர் ஜாதியின் பெயரை கூறி தாக்கியதோடு அவரது முகத்தில் சிறுநீரை தெளித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான முதல் கட்ட அறிக்கையை தமிழக அரசிடம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தாக்கல் செய்துள்ளார்.

Exit mobile version