மருத்துவ படிப்புகளில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது அறிக்கையை முதலைமைச்சரிடம் சமர்ப்பித்தது.

நீட் மதிப்பெண்களின் அடிப்படையில், MBBS, BDS மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த குழு பலமுறை கூடி தீர ஆராய்ந்து இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையைத் தயார் செய்தது.இந்த அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவீதம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version