இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை, பிரதமர் மோடி நாட்டுக்கு அற்பணித்தார்.
ஐ.என்.எஸ் அரிஹந்த் என்று பெயரிடப்பட்டுள்ள அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், கடலில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில், நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு மேலும் பலமடைந்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகை பரிசாக இந்த ஐ.என்.எஸ் அரிஹந்த் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இது இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்படையில் சேர்ந்திருப்பது, பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது. இது, இந்தியார்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்றும், இந்த நாளில், வாஜ்பாய் மற்றும் அப்துல் கலாமை நினைவுகூற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.