மூணாறில் மீண்டும் ரயில் சேவை தொடங்க, கேரள மாநில அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம், மூணாறில் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல, 1908ஆம் ஆண்டு முதல் நீராவி என்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டது. இடையில் 1924ம் ஆண்டு, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ரயில்வே சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மூணாறில் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க கேரள சுற்றுலா வளர்ச்சித் துறை முடிவு எடுத்துள்ளது. இதையொட்டி, ரயில்வே மேம்பாட்டு கழக பிரதிநிதிகளும், கேரள சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகளும், ரயில்வே பாதை அமைக்கும் இடங்களை கூட்டாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுகளின் முடிவுகளை மாநில அதிகாரிகள், கேரள அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளனர்.