சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக் கழகம் என்ற பெயரிலும் அண்ணா பல்கலைக்கழகம் என்றும் 2 ஆக பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய, 5 அமைச்சர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சர் குழுவினர், சீர்மிகு அந்தஸ்து பெறுவது குறித்தும், 2 ஆக பிரிப்பது குறித்தும் ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.