மழைப் பொழிவை கண்டறியும் கோவை மாணவியின் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் 2020 இறுதி சுற்று தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, கோவை மாணவிக்கு வணக்கம் சொல்லி உரையை தொடங்கிய மோடி, மழைப் பொழிவை கண்டறியும் கோவை மாணவியின் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார். 24 மணிநேரமும் உழைத்து வரும் மாணவர்கள், சவாலான காலக் கட்டத்தை எதிர்கொள்ள உள்ளதை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறிய பிரதமர் மோடி, கிராமப் புறங்களில் அனைத்து சுகாதார வசதியையும் ஏற்படுத்துவதே இலக்கு என்றும் குறிப்பிட்டார். காவல்துறையினருக்கு உதவும் வகையில் கருவியை தயாரித்த மாணவரிடம் நீங்கள் எப்போதாவது காவல் நிலையம் சென்றது உண்டா என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.