இயற்கை பாதுகாப்பு சட்டம் குறித்த வகுப்பை கவனித்த மாணவர்கள்

இயற்கையை பாதுகாப்பது தொடர்பான பாடத்தை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 40 நிமிடங்கள் தொடர்ந்து கவனித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா பள்ளியில், இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நடுவர் விவேக், அழகப்பா பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் மற்றும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்து 714 மாணவர்கள் கலந்துகொண்டு, 40 நிமிடங்கள், இயற்கையை பாதுகாப்பது குறித்த பாடத்தை கவனித்து, புதிய உலக சாதனையை படைத்தார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக், இதற்கு முன்னதாக ஆயிரத்து 479 மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடத்தை கவணித்ததே, சாதனையாக இருந்ததாகவும், அந்த சாதனையை முறியடித்து இவர்கள் புதிய சாதனையை படைத்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version