நாகை மாவட்டத்தில், மத்திய அரசின் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த நகர்புற மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் தங்கள் அறிந்த அனுபவங்களை ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டனர்…
மத்திய அரசின் ஒருங்கிணைந்த சம்சாகாரா சிஷ்யா நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 40 பேர் கொண்ட குழுவினர் இத்திட்டத்தின் மூலம் பல்வேறு தகவல்கள் அறிந்து கொண்டனர். அந்த வகையில், தலைமையாசிரியர்களோடு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு சென்று, ரயில் இஞ்சின்கள் இயங்கும் முறை, ஆபத்து காலம் மற்றும் பயணத்தின்போது விலை உயர்ந்த பொருட்கள் தவறி விழுந்தால் பயணிகள் ரயிலினை நிறுத்துவது, ரயில் சிக்னல் அறையிலிருந்து ரயில் பாதையில் உள்ள சிக்னல்கள் எப்படி இயக்கப்படுகிறது எனவும், அதற்கேற்ப ரயில் இஞ்சின் ஓட்டுனர்கள் ரயிலை இயக்குவது எப்படி என்பது குறித்து அறிந்து கொண்டனர்.