நூதன தண்டனையின் அடிப்படையில் காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

மது அருந்தி கல்லூரிக்கு வந்த மாணவர்கள் 8 பேருக்கு நீதிமன்றம் அளித்த நூதன தண்டனையின் அடிப்படையில், அவர்கள் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்தனர்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 8 பேர், கடந்த ஜனவரி மாதம் கல்லூரிக்கு மது அருந்தி வந்துள்ளனர். இவர்களின் ஒழுங்கீன நடவடிக்கையை கண்டித்த கல்லூரி நிர்வாகம் அவர்களை இடை நீக்கம் செய்தது. இதை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை சுதந்திர தினத்தன்று சுத்தம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, மாணவர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இனி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட போவதில்லை எனவும் அவர்கள் உறுதியளித்தனர்.

Exit mobile version