இளைஞர்களை கொண்டு பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கவும்,பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உலகப் பாரம்பரிய வார விழா 19 முதல் 25 ஆம் தேதி வரை, 7 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும், தஞ்சாவூர் பெரிய கோயிலில் மரபு நடை பயணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட என்.எஸ்.எஸ். மாணவர்கள், பாரம்பரிய சின்னங்களை வலியுறுத்தி, முக்கிய வீதிகள் வழியாக நடை பயணம் மேற்கொண்டனர்.
அப்போது பேசிய தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், கிராமங்கள் தோறும் இளைஞர்களை கொண்டு, பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கவும் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.