தேனி மேலப்பேட்டையில் நடந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளிக் குழுமங்களின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஏழ்மையின் காரணமாக மாணவர்கள் பள்ளிப் படிப்பையோ, கல்லூரிப் படிப்பையோ நிறுத்திவிடக் கூடாது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது அதிமுக அரசு என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு உதவி பெறும் பள்ளிகளை கொண்டு வந்தது காமராஜர் தான் என்றும், அதனை திறம்பட செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.