தொழில்நுட்பப்பிரிவுகளில் மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற்று தொழில்முனைவோர்களாகவும், சிறந்த பொறியாளர்களாகவும் மாறவேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியின் 23ம் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா கலந்துகொண்டார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மாணவர்களின் தரம் மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் சமுதாயத்தின் பல சவால்களுக்கு தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டார். மேலும், தொழில்நுட்பப்பிரிவுகளில் மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற்று தொழில்முனைவோர்களாகவும், சிறந்த பொறியாளர்களாகவும் மாறவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறந்த மாணவ – மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.