11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கலாம்.

2 ஆயிரத்து 810 அரசு பள்ளிகளில் மொத்தம் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.97% மாணவர் தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதேபோல், 95.61% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 95.43% தேர்ச்சி பெற்று நாமக்கல் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

பள்ளிகள் வகைபாடு வாரியான தேர்ச்சி சதவீதத்தில், அரசு பள்ளிகள் 90.6% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9% தேர்ச்சி பெற்றுள்ளன. மெட்ரிக் பள்ளிகள் 99.9% தேர்ச்சி அடைந்துள்ளன. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 95.1% தேர்ச்சியடைந்துள்ளனர். பெண்கள் பள்ளிகள் 96.8% தேர்ச்சியும், ஆண்கள் பள்ளிகள் 90.2% தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி சதவீதத்தில், அறிவியல் பாடப் பிரிவுகளில் 93.9% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவுகளில் 97.4% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கலைப் பிரிவுகளில் 95.1% மாணவர்களும், தொழிற்பாடப் பிரிவுகளில் 92.3% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Exit mobile version