30 வருடங்களுக்கு பிறகு குருவுக்கு மரியாதை செய்த மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ராஜன் உள் விளையாட்டரங்கத்தில் லிங்குராஜ் எனப்வரிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு தற்காப்பு கலைகள் பயின்ற மாணவர்கள், தற்போது, சமூகத்தில் பல பொறுப்பான பதவிகளில் உள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து குருவுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தற்காப்பு கலைகளின் உபகரணங்கள் மற்றும் லிங்குராஜ் ஆசானிடம் பயிற்சி பெற்ற புகைப்படங்கள், முக்கிய கடிதங்கள், தங்களது சம்பள விவரம் அடங்கிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். இதையடுத்து, தலைவாழை இலை போட்டு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாஸ்டர் லிங்குராசுக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மாணவர்கள், நினைவு பரிசுகளையும் வழங்கினர். இதனால் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீருடன் ஏற்புரை நிகழ்த்திய மாஸ்டர், அனைவரையும் வாழ்த்தினார்.

Exit mobile version