மூன்று ஆண்டுகள் வரை நீட் தேர்வுக்காக படித்து மருத்துவ இடத்தை பிடித்ததாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ படிப்புகள் துவங்கியுள்ள நிலையில் மாணவர்கள் தாங்கள் எப்படி மருத்துவ இடத்தை பிடித்தோம் என்பதை பகிர்ந்துகொண்டனர். ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து மருத்துவ இடத்தை பிடித்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடின உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக முடியும் எனவும் மருத்துவ முதலாமாண்டில் கால்பதித்துள்ள மாணவ மாணவிகள் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர்.