பஸ் டே கொண்டாட்டத்தின்போது பேருந்து மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த மாணவர்கள்

தடையை மீறி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பேருந்துகளின் கூரை மீதேறி மாணவர்கள் பலர் ரகளை செய்தனர். இது தொடர்பாக சென்னையில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை ஆவடியில் இருந்து அண்ணாசதுக்கம் செல்லும் பேருந்தின் மேற்கூரையில் பயணித்த மாணவர்கள் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் மேற்கூரையில் இருந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தின் மேல் ஏராளமான மாணவர்கள் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் வருகின்றனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் பேருந்தின் முன்னாடி வந்து வாகனத்தை நிறுத்துகின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத பேருந்து ஓட்டுநர், பேருந்து பைக் மீது மோதாமல் இருக்கும் பொருட்டு பிரேக் அடித்து நிறுத்துகிறார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் பயணித்த அனைவரும் பேருந்தின் முன்னால் கீழே விழுகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version