கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் பர்தா அணிந்து வந்த மாணவிகளை தடுத்து நிறுத்தி கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கூந்தாபுரா பகுதியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் இந்துத்துவா அமைப்பில் தொடர்புடைய மாணவர்கள், பர்தா அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராக கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பர்தா அணிந்து கல்லூரிக்கு வர அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்த அவர்கள், காவித்துண்டு அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்துத்துவா அமைப்பு தலைவர்களும், கூந்தாபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹாலட்டி ஸ்ரீநிவாஸ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பர்தா அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனிடையே ஜாகரன வேதிகா என்ற அமைப்பு மாநிலம் முழுவதும் காவி சால்வை இயக்கம் மூலம் மாணவர்களுக்கு காவி நிற சால்வை அணிந்து சென்றனர்.