சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் பேரணி நடத்தினர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் அவசியத்தையும் வனங்களின் அவசியத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி சார்பாக நடைபெற்ற பேரணியின்போது, வனங்களை பாதுகாக்கவும், துணிப்பையை பயன்படுத்தவும், பாலிதீன் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டது. மேட்டுச்சாலை வழியே பயணித்த வாகன ஓட்டிகளுக்கு மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.