ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மாணவர்கள் கைது

 

போரூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர், அரக்கோணம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரி உள்ளிட்ட மூவருக்காக ரெம்டெசிவிர் மருந்துக்கு முயற்சித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் லேப் டெக்னீசியன் சரவணன் என்பவர் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பதை அறிந்து கள்ளச்சந்தையில் 3 குப்பிகளை 57ஆயிரம் ரூபாய்க்கு பெற அணுகியுள்ளார். லேப் டெக்னீசியன் கோர்ஸ் மாணவர்களான விஜய் மற்றும் தொல்காப்பியன் மூலம் மருந்தை ஆனந்தகுமாருக்கு சரவணன் கொடுத்தபோது, தகவலின் பேரில் அங்கிருந்த நுண்ணறிவு போலீஸார், அவர்களைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான லேப் டெக்னீசியன் சரவணனைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version