உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோளை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை

உலக அளவில் சிறிய செயற்கைக்கோளை கண்டுபிடித்து ஈரோடு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னிமலை தனியார் பள்ளியில் படித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோளை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் ஸ்ரீநிதி, நவநீதகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் மற்றும் சந்திரகுமார் ஆகியோர், 40 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.

கையடக்க அளவில் உள்ள இந்த செயற்கைக்கோள், கடல் மட்டம், வெப்பம், காற்றழுத்தம் போன்றவை குறித்த தகவல்களை செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், செயற்கைகோளை வடிவமைக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவும் மாணவர்கள் கூறினர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கியுள்ள இந்த செயற்கைகோளை, பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, ஈரோடு ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து, செயற்கைக்கோளை காண்பித்து மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

Exit mobile version