இன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோ அனுப்பிய மாணவரை மிரட்டி மோசடி!

இன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோ அனுப்பிய கல்லூரி மாணவரை மிரட்டி 59 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த ஐசக் என்ற பொறியியல் மாணவர், இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அவரை ரியா என்ற பெயரில் தொடர்புகொண்ட நபர், பணம் கொடுத்தால் ஆபாச வீடியோகால் பேசலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். போலியாக உருவாக்கப்பட்ட ஐடி என தெரியாமல், பழகிய சில நிமிடங்களிலேயே தனது நிர்வாண வீடியோவை ஐசக் அனுப்பினார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி, ரியா என்ற பெயரில் உள்ள நபர் 60 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். தர மறுத்தால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வீடியோவை அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ஐசக், “போன்பே ஆப்” மூலம் 3 தவணைகளாக 59 ஆயிரம் ரூபாயை மர்ம நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். ஒரு மணி நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை இழந்த ஐசக், அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இணையதளம் தொடர்பான குற்றம் என்பதால், இந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்வு மாணவரின் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Exit mobile version