முகநூல், வாட்ஸ் அப் என பயன்படுத்தி வருபவர்கள் மத்தியில், அஞ்சல் அட்டை அனுப்பும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்றைய காலத்தில் கடிதங்கள் எழுதுவது, மெல்ல மெல்ல குறைந்து விட்ட நிலையில், இளம் தலைமுறையினர் அஞ்சல் அட்டையை முற்றிலும் மறந்து விடும் சூழல் உள்ளது. இந்நிலையில், அஞ்சல் அட்டை எழுதும் பழக்கத்தை நினைவுபடுத்தும் விதமாக சென்னை அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 3,350 மாணவிகள், தங்கள் பெற்றோர்களுக்கு, அஞ்சல் அட்டை எழுதி அனுப்பினர். மேலும் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, தபால் நிலையத்தில் ஒரு ரூபாயில் சிறு சேமிப்பு கணக்கு துவக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், தபால் துறை அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.