இயற்கை வேளாண் பண்ணையில் நெல் நாற்று நடவு செய்த பள்ளி மாணவர்கள்

சிவகங்கையில் தனியார் பள்ளி மாணவர்கள் இயற்கை வேளாண் பண்ணையில் நெல் நாற்று நடவு செய்தனர்.

வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு பல்வேறு கற்றல் அனுபவங்களை பாடத் திட்டத்தோடு சேர்த்து பயிற்று வித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.

கடலை, வாழை, கரும்பு, கொய்யா ஆகியவற்றின் விதைப்பு மற்றும் அறுவடை வரையிலான பணிகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைத்தனர். பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் நெல் நாற்றுகளை நட்டனர். விவசாயம் செய்வோம் என்ற உறுதிமொழியை அவர்கள் ஏற்றனர். 

Exit mobile version