பொள்ளாச்சியில் விபத்து ஏற்படுத்திய மாணவனுக்கு நூதன தண்டனை

கோவை மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்த சபி, என்பவரது மகன் ரோகித். கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.  இவர் ஓட்டுநர் உரிமை இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதையடுத்து போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், 10 நாட்கள் பணியாற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வால்பாறை சாலையில்  இந்தப் பணியில் மாணவர் ரோகித்  ஈடுபட்டார். லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கும் 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version