பள்ளியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை காவல்துறையினர் தீவிர விசாரணை

மதுரையில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி அர்ச்சனா வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட சக மாணவர்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மாணவி அர்ச்சனா 3 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version