விஜயதசமியையொட்டி அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவு

விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30ம் தேதியுடன் முடித்துக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை விஜயதசமியை முன்னிட்டு 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளிலும், 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுத் தொடக்கப் பள்ளிகள் விஜயதசமி நாள் அன்று திறந்து வைத்து மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version