டிராக்டரில் அடிபட்டு இறந்த சிறுமி, பாலியல் ரீதியாக கொலை -காவல்துறை

திண்டுக்கல்லில் டிராக்டரில் அடிபட்டு இறந்ததாக கூறப்பட்ட சிறுமி, பாலியல் ரீதியாக கொலை செய்யப்பட்டதை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த நாகேந்திரன்-பாண்டியம்மாள் தம்பதியினரின் 6 வயது சிறுமி, டிராக்டரின் அடிப்பட்டு இறந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குணசேகரன் என்ற 16வயது சிறுவனிடம், விசாரணை மேற்கொண்டனர். அதில், குணசேகரன் சிறுமியை பல முறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், சிறுமி எதிர்பாராத விதமாக டிராக்டரில் இருந்து விழுந்து இறந்ததை, பயன்படுத்தி இதனை மறைத்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். குணசேகரன் அளித்த தகவலின் படி அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் கிஷோர், தோட்ட உரிமையாளர் உமாபதி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version