வேலைவாய்ப்பு கேட்டு போராட்டம்: முதலமைச்சர் குமாரசுவாமி ஆவேசம்

வேலைவாய்ப்பு கேட்டு போராட்டம் நடத்தியவர்களிடம், போய் மோடியிடம் கேளுங்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோபமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிராமங்களில் தங்கும் திட்டத்துக்காக கரேகுட்டா என்ற கிராமத்துக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ராய்சூரில் பேருந்தில் ஏறி பயணித்தார். அப்போது வாகனத்தை மறித்த எர்மாரஸ் அனல்மின் நிலை பணியாளர்கள், நிரந்தர பணி வழங்கக்கோரி சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் பேசியும் முதலமைச்சரின் வாகனத்திற்கு வழிவிட போராட்டக்காரர்கள் மறுத்தனர். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் குமாரசாமி எனக்கா வாக்களித்தீர்கள், மோடிக்கு தானே வாக்களித்தீர்கள் என்று ஆவேசத்துடன் கூறினார். மோடியிடம் சென்று வேலை வேண்டும் எனக் கேளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு வாக்களிக்காததால் யாருக்கும் வேலை தரமுடியாது என்று மிரட்டும் தொணியில் குமாரசாமி பேசினார். இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version